மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் குப்பன், நடராசன், குப்புசாமி, மதனகவி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைசித்தார்த்தன், வாலாசா வல்லவன், காஞ்சி அமுதன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், அரிசி, தயிர் போன்ற உணவுப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலான நெடுஞ்சாலைத்துறை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story