சிதம்பரத்தில்ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூர்
சிதம்பரம்,
சிதம்பரம் மேலவீதி பெரியார் சிலை அருகே தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் கடலூர் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு சங்க நிர்வாகி அச்சுதானந்தன் தலைமை தாங்கினார். வட்டச்செயலாளர் மனோகர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். இதில் நிர்வாகிகள் மகாலிங்கம், மச்சேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் உள்ளிட்டவர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.7850-ஐ தமிழக அரசு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் குழந்தைவேலு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story