பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக முடக்கியதை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் உக்கடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது
கோயம்புத்தூர்
கோவை
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் வங்கி கணக்கு களை மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக முடக்கியதை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கோவை உக்கடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கோவை மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் உபைதுர் ரகுமான் வரவேற்றார்.
இதில் மாநில பேச்சாளர் முகமது பயாஸ், தமிழ் புலிகள் இளவேனில், மே 17 இயக்க சுந்தரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி வக்கீல் அணி துரை இளங்கோவன், திராவிடர் தமிழர் கட்சி களப்பிரார் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் மெகாஜூதீன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story