பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தென்காசி

தென்காசி:

தென்காசியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் லுக்மான் ஹக்கீம் தலைமை தாங்கினார். எஸ்.டி.பி.ஐ. நகர தலைவர் சர்தார், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சதீஷ் வள்ளுவன், என்.டபிள்யூ.எப். மாநில செயலாளர் சல்மி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் அப்துல் பாசித், மண்டல தலைவர் திப்புசுல்தான், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் யாசர் கான், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story