ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூர்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்ரேட்டருக்கு ரூ.11,050 மாத ஊதியம் வழங்கிட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். பணிக்கொடை, ஒய்வூதியம் வழங்கிட வேண்டும். தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலர்களுக்கு மாத ஊதியம் ரூ.10 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் காமராஜ், மாநிலக்குழு உறுப்பினர் லோகநாயகி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், தலைவர் அனிபா, பொருளாளர் மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story