மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை


மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை வேங்கிக்கால் மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோவிந்தசாமி, கோவிந்தராஜன், மகாலிங்கம், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.கவுரவத் தலைவர் மன்னார், மாவட்ட செயலாளர் நீதிமாணிக்கம், பொருளாளர் வீரமுத்து ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் கலந்து கொண்டவர்கள் 70 வயது ஓய்வூதியவர்ளுக்கு 10 சதவீதம் ஓய்வூதிய உயர்வு வழங்கிட வேண்டும். புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். மருத்துவக்காப்பீடு அட்டைகளை பிழைகளின்றி முழுமையான விவரங்களுடன் வழங்கிட வேண்டும். ஒப்பந்தத்தில் உள்ளபடி பணமில்லா மருத்துவம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல் நன்றி கூறினார்.


Next Story