லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு விலைவாசியும் உயர்கிறது. ஆகவே சுங்க கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமென அனைத்து சுங்கச்சாவடிகளிலும் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வேலூர் மற்றும் குடியாத்தம் லாரி மற்றும் வேன் உரிமையாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் லோகநாதன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சுகுமார் வரவேற்றார்.

காலாவதியான சுங்கச்சாவடி மையங்களை அப்புறப்படுத்த வேண்டும், மேலும் இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் கட்டுவதை தவிர்த்தால் கடனாக வாங்கிய லாரிக்கான தொகையை கட்டிவிடலாம். ஆகவே சுங்க வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story