வீரசோழன் விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


வீரசோழன் விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி வீரசோழன் விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் அருகே மங்கநல்லூர் கடைவீதியில் வீரசோழன் விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வீரசோழன் விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவர் வாணிதாஸ் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் மதிவாணன், காத்தலிங்கம், மங்கநல்லூர்குரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இயற்கை விவசாயி மாப்படுகை ராமலிங்கம், நிலநீர் பாதுகாப்பு இயக்க தலைவர் செம்பை இரணியன், முன்னோடி விவசாயி பாண்டுரங்கன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் வீரசோழன் விவசாயிகள் முன்னேற்ற சங்க செயலாளர் சின்னப்பா மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர்.


Next Story