யாதவா மகா சபை சார்பில் ஆர்ப்பாட்டம்


யாதவா மகா சபை சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 March 2023 12:15 AM IST (Updated: 27 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடியில் யாதவா மகா சபை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

பரமக்குடி,

கடந்த சில தினங்களுக்கு முன்பு பரமக்குடி அருகே உள்ள பகைவென்றி கிராமத்தை தொழிலதிபர் பழனிச்சாமி என்பவர் கடத்தி செல்லப்பட்டார். அது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு யாதவா மகா சபை சார்பில் பரமக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு யாதவர் மகா சபையில் பொதுச் செயலாளர் வேலு மனோகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மலேசியா பாண்டியன் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பிரகலநாதன் வரவேற்றார். பின்பு திடீரென சிலர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பரமக்குடி தாசில்தார் ரவி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. யாதவர் சங்க நிர்வாகிகள் யாதவர் சமூகத்தினர் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Related Tags :
Next Story