100 நாள் வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
முதுகுளத்தூர் அருகே உள்ள மீசல் காலனி கிராமத்தில் 100 நாள் வேலை வழங்க கோரி அகில இந்திய விவசாய சங்க தாலுகா குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம்
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள மீசல் காலனி கிராமத்தில் 100 நாள் வேலை வழங்க கோரி அகில இந்திய விவசாய சங்க தாலுகா குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாய தொழிற்சங்க தாலுகா செயலாளர் அங்குதன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் விவசாய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கணேசன், விவசாய தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 100 நாள் திட்ட வேலை வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மீசல் கருப்பசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தோழர் செல்லூர் வீரசெம்பன், திருவரங்கம் முனியசாமி, மீசல் முருகேஸ்வரி உள்பட 100-க்கும் மேற்பட்ட மீசல் காலனியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் விவசாய சங்க தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story