தினமும் வழிபாடு நடத்த அனுமதிகோரி ஆர்ப்பாட்டம்


தினமும் வழிபாடு நடத்த அனுமதிகோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தினமும் வழிபாடு நடத்த அனுமதி அளிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தினமும் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதி அளிக்க கோரி பக்த சபா குழுக்கள் சார்பில் முத்தாலம்மன் பஜார் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவில் பக்த சபா தலைவர் சுந்தரராஜபெருமாள் தலைமை தாங்கினார். பக்த சபா செயலாளர் விவேகானந்தன், வியாபாரிகள் சங்க தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தினசரி மலையேறி சென்று பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும். சதுரகிரி கோவிலில் போலீசார், வருவாய்த்துறை, வனத்துறை ஆகியவற்றை மதுரை மாவட்டத்தில் இருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு மாற்றி உத்தரவிட வேண்டும். சதுரகிரியில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுபாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் கோவிந்தன், வத்திராயிருப்பு பேரூராட்சி தலைவர் தவமணி, ஓம் சக்தி பக்த சபா குழு மற்றும் முருகன் பக்த சபா குழுவை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story