தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கக்கோரி ஆர்ப்பாட்டம்


தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Aug 2023 1:45 AM IST (Updated: 11 Aug 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மறைமாவட்ட எஸ்.சி., எஸ்டி. பணிக்குழு சார்பில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மறைமாவட்ட எஸ்.சி., எஸ்டி. பணிக்குழு சார்பில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கக்கோரி திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது, தலித் கிறிஸ்தவர்களை இதுவரை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கவில்லை. இது அநீதி ஆகும். இதனை வலியுறுத்தும் விதமாக ஆகஸ்டு மாதம் 10-ந் தேதியை துக்க நாளாக அனுசரித்து வருகின்றோம். மேலும் தலித் கிறிஸ்தவர்கள் கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளனர். மதத்தின் பெயரால் நாங்கள் ஒடுக்கப்படுகிறோம். இதனை கருத்தில் கொண்டு, அரசு எங்களுடன் கலந்து பேசி தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் முதன்மை குரு சகாயராஜ், பொருளாளர் சாம்சன், திண்டுக்கல் வட்டார அதிபர் மரிய இஞ்ஞாசி மற்றும் மறைமாவட்ட பாதிரியார்கள், தலித் கிறிஸ்தவ அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பணிக்குழு செயலர் தாமஸ் ஜான் பீட்டர், நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


Next Story