சர்வீஸ் சாலை அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


சர்வீஸ் சாலை அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x

சர்வீஸ் சாலை அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி

திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை துவாக்குடியில் இருந்து அரியமங்கலம் பால் பண்ணை வரை சர்வீஸ் சாலை இல்லாததால் அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது. எனவே சர்வீஸ் சாலை அமைக்க கோரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் துவாக்குடியில் இயங்கி வரும் சுங்கச்சாவடியை இழுத்து மூடும் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் வருகையையொட்டி அதனை காவல்துறையினரின் வேண்டுகோளை ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு காட்டூர் பகுதி செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். மாநில குழுவை சேர்ந்த எஸ் ஸ்ரீதர், மாவட்ட செயலாளர் ராஜா உள்பட பலர் சர்வீஸ் ரோடு அமைத்தராத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், சர்வீஸ் ரோடு கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.


Next Story