குடிமனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்


குடிமனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x

குடிமனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் பகுதி செயலாளர் விஜயேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி, முடுக்குப்பட்டியில் அரசு நிலத்தில் நீண்ட காலமாக வசிக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்க வேண்டும். முடுக்குப்பட்டி குடியிருப்பு வீடுகளை அப்புறப்படுத்தும் நோக்கத்தில் செயல்படும் ரெயில்வே உத்தரவை தடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாவட்ட செயலாளர் ராஜா மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


Next Story