பொள்ளாச்சியில் நாளை நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு


பொள்ளாச்சியில் நாளை நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
x

ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதை கைவிட கோரி பொள்ளாச்சியில் நாளை (திங்கட்கிழமை) நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக பரம்பிக்குளம்- ஆழியாறு நீர் பாதுகாப்பு கூட்டமைப்பினர் தெரிவித்தனர்

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதை கைவிட கோரி பொள்ளாச்சியில் நாளை (திங்கட்கிழமை) நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக பரம்பிக்குளம்- ஆழியாறு நீர் பாதுகாப்பு கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து ரூ.930 கோடி செலவில் திண்டுக்கல் மாவட் டம் ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல அரசாணை வெளியிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி யில் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திருமூர்த்தி பாசன விவசாயிகள் முடிவு செய்தனர்.

இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். மேலும் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் நீர் பாதுகாப்பு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் பிரச்சினை தொடர்பாக அனைத்து தரப்பினரையும் கலந்து ஆலோசித்து சுமூக தீர்வு காண்பதற்கு அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோர் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் வருகிற 1-ந்தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் நீர் பாது காப்பு கூட்டமைப்பு சார்பில் பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை கட்டிடத்தில் நேற்று இரவு அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் தொழில் வர்த்தக சபை தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ் ணன், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தன், திரு மூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம், ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்க செயலாளர் செந்தில் மற்றும் வியாபாரிகள், நகை கடை உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

ஒத்திவைப்பு

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் கூறியதாவது:-

ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதை கைவிட வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டம், கடையடைப்பு நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைத்து உள்ளது.

அதை ஏற்று நாளை நடைபெற இருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. சென்னை யில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுமுகமான முடிவு ஏற்படும் என்று நம்புகிறோம். முடிவு எட்டப்படாத பட்சத்தில் 3-ந் தேதி கூட்டம் நடத்தி மீண்டும் போராட்டம் நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story