பேட்டையில் ஆர்ப்பாட்டம்


பேட்டையில் ஆர்ப்பாட்டம்
x

பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை பேட்டை முனிசிபல் பஸ் நிறுத்தம் அருகே ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பொது சிவில் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பீரப்பா, மாநில துணைச் செயலாளர் ரசூல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் திருச்சி ஜாகீர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் அலிம் அல் புகாரி, மாநில ஊடக பிரிவு துணைச்செயலாளர் பசிர் அகமது ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட துணைச் செயலாளர் சேவத்தா, மருத்துவ அணி துணைச் செயலாளர் யூனுஸ், மாவட்ட செயலாளர் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story