பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம்


பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Aug 2023 12:15 AM IST (Updated: 1 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலியில் வருகிற 5-ந்தேதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

கடலூர்

நெய்வேலி:

மந்தாரக்குப்பம் அடுத்த சேப்ளாநத்தத்தில் தே.மு.தி.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாலு, கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் வக்கீல் ஞானபண்டிதான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரிவெட்டி, கத்தாழை, மூம்முடிசோழகன், வளையமாதேவி ஆகிய பகுதிகளில் நெற்பயிரை அழித்த என்.எல்.சி. நிர்வாகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் நெய்வேலி நிலக்கரி 2-வது சுரங்கத்தின் நுழைவாயில் முன்பு கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்ய தீவிர களப்பணியாற்றுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள், பொறுப்பாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story