அசோலா வளர்ப்பு முறை குறித்து விவசாயிகளுக்கு மாணவிகள் செயல்விளக்கம்


அசோலா வளர்ப்பு முறை குறித்து விவசாயிகளுக்கு மாணவிகள் செயல்விளக்கம்
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

அசோலா வளர்ப்பு முறை குறித்து விவசாயிகளுக்கு மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனர்.

தென்காசி

சிவகிரி:

வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் ஊரக கிராமப்புற வேளாண் அனுபவ பாடத்திற்காக சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் வட்டார பகுதியில் 75 நாட்கள் முகாமிட்டுள்ளனர். கல்லூரி முதல்வர் ராமலிங்கம் தலைமையில், உதவி பேராசிரியர்கள் ராஜேஸ்வரன் மற்றும் சுமிதா பாரதி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நேற்று சிவகிரி அருகே உள்ள வெள்ளானைக்கோட்டை தனியார் விவசாய நிலத்தில் மாணவிகள் அம்ரிஷா, பிபினி, காவியா கிருஷ்ணா, கிருஷ்ண பிரியா, மனிஷா குளோரா, நஸ்ரின் பாத்திமா, ரோஷினி, சவுமியா, தங்ககீதா ஆகியோர் அசோலா வளர்ப்பு முறை பற்றியும், அதன் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.


Next Story