மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

வாணியம்பாடி அருகே மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோவில் பகுதியில் உள்ள ஆவின் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் முன்பாக பால் உற்பதியாளர் சங்கத்தினர் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், 1 லிட்டர் பசும் பாலின் விலையை ரூ.40 ரூபாயகவும், 1 லிட்டர் எருமை பாலின் விலையை ரூ.55 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தை ெயாட்டி அம்பலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story