பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

திருப்பத்தூரில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சேகராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஹரி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் முரளிதரன் வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் 13 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்து, வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இருந்து பகுதிநேர ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story