முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

விடைத்தாள் திருத்தும் மையத்தின் முன்பு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலைநாடார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது. இந்த மையத்தின் முன்பு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெயசீலன் பிரபாகரன் தலைமை தாங்கினார்.

இதில் மாநில பொருளாளர் அன்பழகன், முன்னாள் மத்திய மண்டல மகளிர்அணி செயலாளர் பாரதி, மாவட்ட செயலாளர் தமிழ்கண்ணன், பொருளாளர் தமிழ்செல்வன், மகளிர் அணி செயலாளர் முத்துமீனா உள்ளிட்ட நிர்வாகிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரவேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும்.

மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், நலத்திட்ட உதவிகளை அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். அதேபோல் ஆசிரியர்கள், மாணவர்களின் நலன்கருதி கற்பித்தல் பணியை மட்டுமே ஆசிரியர்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


Next Story