பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தீவனம் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம்
செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியில் விவசாயிகளுக்கு பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தீவனம் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனர்.
தென்காசி
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியில் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தீவன புல் குறித்து செயல்விளக்க பயிற்சி அளித்தனர். வேளாண் அலுவலர் சரவணன் அறிவுரையின்படி, வாசுதேவநல்லூா் தங்கப்பழம் வேளாண் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவிகள் அஞ்சலி, பிருந்தா, பரமேஸ்வரி, ரியா, கண்மணி, மதுமிதா, செல்வமங்கை, சுப்புலட்சுமி, மீனா ஆகியோர் கிராம தங்கல் பயிற்சியின் ஒரு பகுதியாக விவசாயிகளிடம் சைலேஜ் குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்தனர். இதில் சைலேஜ் எவ்வாறு உற்பத்தி செய்வது, அதை கால்நடைகளுக்கு தீவனமாக கொடுப்பது குறித்து விளக்கி கூறினர். இந்த பயிற்சி முகாமில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
Related Tags :
Next Story