காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆற்காட்டில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை
சோனியா காந்தி மற்றும் தலைவர் ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை வழக்கை கண்டித்தும், டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்தும் ஆற்காடு தபால் நிலையம் முன்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கட்சியின் ஆற்காடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மலர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் ஆற்காடு ஒன்றிய தலைவர் வீரப்பா, மாநில பொதுக்குழு உறுப்பினர் விநாயகம், மாவட்ட பொதுச் செயலாளர் ஆனந்தன், சேதுராமன், பியாரேஜான், சம்பத் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story