தி.மு.க.மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து ராணிப்பேட்டையில் தி.மு.க.மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை
மத்திய அரசை கண்டித்து ராணிப்பேட்டையில் தி.மு.க.மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில், தி.மு.க.மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து பெண்கள திரளாக பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய மகளிர் அணி நிர்வாகிகள், ''மணிப்பூர் மாநிலத்தில் ராணுவ வீரரின் மனைவிக்கு இழைக்கப்பட்ட கொடூரம் என்பது இந்தியாவிற்கே ஏற்பட்ட தலைகுனிவு என்றும், பெண் என்று கூட பாராமல் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி பின்பு நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்தியதை மத்திய அரசு தடுக்க தவறி விட்டது'' எனவும் குற்றஞ்சாட்டினர். ஆர்ப்பாட்டத்தில் நகர, ஒன்றிய, பேரூர் கழக மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் ஒன்று திரண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்






