மறவர் மகாசபை சார்பில் ஆர்ப்பாட்டம்
மறவர் மகாசபை சார்பில் ஆர்ப்பாட்டம்
விருதுநகர்
ராஜபாளையம்.
எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ராஜபாளையம் மறவர் மகாசபை சார்பில் ஜவஹர் மைதானத்தில் மகாசபை தலைவர் சேதுராகவன், துணைத் தலைவர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் மீது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தண்ணீர் பாட்டில் வீசி அவதூறாக பேசியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் இணைத் தலைவர் ராக்கப்பன், செயலாளர் மாரியப்பன், பொருளாளர் நல்லமுத்து, துணைச் செயலாளர்கள் மணிகண்டன், முத்துராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story