மஸ்தூர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம்


மஸ்தூர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம்
x

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் மஸ்தூர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

அரக்கோணம் ரெயில் நிலையத்தில், ரெயில் நிலைய மேலாளர் அலுவலகம் முன் சென்னை கோட்ட ரெயில்வே மஸ்தூர் யூனியன் அரக்கோணம் மெக்கானிக்கல் பிரிவு சார்பில் செயலாளர் குமார் தலைமையில் சென்னை கோட்ட ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் புதிய உறுப்பினர் அடையாள அட்டை வேண்டியும், பதவி உயர்வு பெற்ற சீனியர் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான ஏற்பாட்டிற்கு உத்தரவாதம் தந்த நிர்வாகம் அதற்கான ஆன்லைன் லிங்கை வெளியிட்டு ஒரு வருட காலம் ஆகியும் அடையாள அட்டை விண்ணப்பத்தை தொழிலாளர்களுக்கு தராததையும், ரெயில்வேயில் வேலை செய்வதற்குண்டான அடிப்படை ஆவணமாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அடையாள அட்டை வழங்காமல் மெத்தனமாக இருக்கும் சென்னை கோட்ட ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தொழிற் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story