தமிழக கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்


தமிழக கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
x

செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பில் வேளாண் திட்ட கையேடு குளறுபடியை கண்டித்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் நெல் பயிர் வகைகள், தரிசனங்கள் சாகுபடி கொண்டு வருதல், தேசிய எண்ணெய் வித்துக்கள், மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் பாரத பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம், முதல்-அமைச்சரின் மானாவரி மேம்பாட்டு இயக்கம் விதைகள் மற்றும் நடவு பொருட்கள் உபயோகம் உள்ளிட்டவை குறித்து ேவளாண் திட்ட கையேட்டில் விளக்கப்பட்டுள்ளது.

இது குஷ்கா போன்று உள்ளது. பிரியாணி என்றால் வேளாண்மை துறை திட்டங்கள், தோட்டக்கலை துறை திட்டங்கள், வேளாண்மை பொறியியல் துறை திட்டங்கள், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகவரித்துறை திட்டங்கள், கால்நடை பராமரிப்பு துறை திட்டங்கள், மாவட்ட நீர் பிடிப்பு பகுதி மேலாண்மை திட்டங்கள் என பல்வேறு விவரங்கள் இடம் பெற வேண்டும்.

எனவே வேளாண் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து பிரியாணிக்கும் குஷ்காவுக்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக் கூறி பிரியாணி சாப்பிட்டு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து கோரிக்கை மனுவினை உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினர்.


Related Tags :
Next Story