கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கலெக்டர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். அப்போது அவர்கள் கையில் கருவாடு, ரேஷன் அரிசியை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, ரேஷன் கடைகளில் தரமான அரிசியை வினியோகம் செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் ''ரேஷன் கடைகளில் தரமான அரிசி வினியோகம் செய்ய வேண்டும். உள்ளூர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரேஷன், சத்துணவு மற்றும் அரசு திட்டங்களுக்கு மணிலா, தேங்காய் எண்ணெயை பயன்படுத்த வேண்டும்'' என்பன உள்பட கோரிக்கைளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் வழங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.