ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்


ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
x

ஆரணியில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது,

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது,

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் ரஹ்மத்துல்லா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் எம். நாசினி, வட்டார செயலாளர் ஆர். சாந்தி, பொருளாளர் பரீதா, வட்டார துணைத் தலைவர் ஜோதிலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆரணி, பையூர் பகுதிகளில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் அனைத்து சமூகத்தினருக்கும் வீட்டுமனைகள் வழங்க கோரி இதில் ோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர் குப்புரங்கன், மாவட்ட குழு நிர்வாகி ஆரிப், மாவட்ட செயலாளர் தங்கராஜ், நிர்வாக குழு முத்தையன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


Next Story