தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம்
வேளாங்கண்ணி:
கீழையூர் ஒன்றியம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைமை நிலைய செயலாளர் ரமேசு தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கீழையூர் ஒன்றிய செயலாளர் குணசேகரன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கீழையூர் வட்டார கல்வி அலுவலகத்தில் வேலைபார்த்து வரும் வட்டார கல்வி அலுவலரை கூடுதல் பொறுப்பாக வேதாரண்யம் வட்டார கல்வி அலுவலகத்திற்கு வேலைபார்ப்பதற்காக பணியமர்த்தப்பட்டு உள்ளார். இதனை ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய தலைவர் தாமரைச்செல்வன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story