தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பா.ஜ.க. அரசை கண்டித்து இன்று அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் செங்கம் குமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தார்.
இதில் அமலாக்கத்துறையை பயன்படுத்தி சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களை பழிவாங்கும் பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் புருஷோத்தமன், மாவட்ட பொருளாளர் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன், இளைஞர் அணி அமைப்பாளர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story