ராணிப்பேட்டையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
x

ராணிப்பேட்டையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை முத்துக்கடையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சினிவாசன், கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசிநாதன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தவராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்பாட்டத்தில் நாங்குநேரி பகுதியில் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

Next Story