தாய் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
பரமக்குடியில் தாய் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பரமக்குடி,
பரமக்குடி ஐந்து முனை பகுதியில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி வழங்க கோரியும், தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும். மாணவி ஸ்ரீமதி மரணத்திற்காக போராடிய இளைஞர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தியும் தாய் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைவர் பி.எம். பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் செல்வம், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கணேசன், மாநில செயற்குழு உறுப்பினர் மைக்கேல் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ராஜ்குமார் கைது செய்தார். பின்பு மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் சுரேஷ், மலைச்சாமி மாரிமுத்து மாநில துணை பொதுச்செயலாளர், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பரமக்குடி நகர் தலைவர் பூபதி நன்றி கூறினார்.