ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
x

ராகுல்காந்தியிடம் அமலாக்க துறை விசாரணை நடத்தியதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

ராகுல்காந்தியிடம் அமலாக்க துறை விசாரணை நடத்தியதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் டெல்லியில் அமலாக்க துறை விசாரணை நடத்தியது. இதனை கண்டித்து திருப்பத்தூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பத்தூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை நகரமன்ற உறுப்பினர் இ.பரத், தலைமை வகித்து தொடங்கி வைத்து பேசினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், அமலாக்கத்துறை மூலம் பொய் வழக்குப் போட்டு ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீது விசாரணை நடத்தும் மத்திய அரசை கண்டித்தும், பாரதீய ஜனதாவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் நெடுமாறன், முன்னாள் நகர தலைவர் வெங்கடேசன், விஜயராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலர் பார்த்திபன் நன்றி கூறினார்.

Next Story