இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
வேலூரில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் அருகே இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வேலூர் மாவட்ட மண்டல தலைவர் எஸ்.வில்சன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் கவுஸ்கான், பொருளாளர் பத்மநாபன், மகளிரணி தலைவர் உஷா, இளைஞரணி தலைவர் ஜோனத்தான், இளைஞரணி செயலாளர் கோகுல்ராஜ் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாநில மருத்துவரணி செயலாளர் கணேசன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் ரம்மி விளையாட்டையும், காட்டன் சூதாட்டத்தையும் தடை செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், காட்பாடி ரெயில்வே மேம்பாலம் சீரமைப்பு தொடர்பாக மாற்றுவழி ஏற்படுத்தி கொடுக்காமல் பாலத்தை மூடியதை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.