மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம்


மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம்
x

காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரி மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

வேலூர்

காட்பாடி

வேலூர் மண்டல மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் காட்பாடி காந்திநகர் மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி, சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் கோவிந்தராஜ், தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கம் டேவிட்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். எம்பிளாயிஸ் பெடரேஷன் மாநில இணை செயலாளர் ப.செந்தில், சேட்டு, வட்ட பொருளாளர் அக்னிபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

1.12.19 முதல் மின்வாரிய பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் எம்பிளாயிஸ் பெடரேஷன் மாநில செயலாளர் தாவித், மண்டலத் தலைவர் ராயப்பன், வட்ட செயலாளர் குமார் உள்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story