இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆர்ப்பாட்டம்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆர்ப்பாட்டம்
x

திருவண்ணாமலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காமராஜர் சிலை அருகில் தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுலைமான்கான் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முகமதுஅலி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் நவாப்ஜான் வரவேற்றார்.


ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தேசிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அப்துல்பாசித் கலந்து கொண்டு பேசினார். இதில் நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கண்டித்தும், அவர்களை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் முகமது அனிபா, அப்துல் சத்தார், மாவட்ட கவுரவ ஆலோசகர் ஷேக்முபாரக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நகர செயலாளர் யூனுஸ்பாஷா நன்றி கூறினார்.


Next Story