விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
x

திருப்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் பார்த்திபன் தலைமை வகித்தார். நகர செயலாளர் சு. ஆனந்தன் வரவேற்றார். முருகேசன் ஆனந்தவேடி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்புச் செயலாளர் கி.கோவேந்தன் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பெரியார், திருவள்ளுவர், அம்பேத்கர் ஆகியோர் சிலைகளுக்கு காவி துண்டு அணிவித்து, திருநீர் பூசும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., சனாதன சங்பரிவார் இயக்கங்களை தடை செய்ய வேண்டும் எனகோஷங்கள் எழுப்பினார்கள். மாவட்ட செயலாளர் சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சக்தி, அண்ணாமலை, விமல் ரமேஷ், ஜெயக்குமார், குபேந்திரன், மாநில துணைச் செயலாளர் ஓம் பிரகாஷ் உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் தொகுதி செயலாளர் சிவா நன்றி கூறினார்.


Next Story