அஞ்சல் துறை ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்


அஞ்சல் துறை ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
x

திருப்பத்தூரில் அஞ்சல் துறை ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கோட்டம் அஞ்சல்துறை மற்றும் ஆர்.எம்.எஸ். ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது. கூட்டமைப்பு கோட்ட செயலாளர் எல்.வெற்றிவேல் முருகன தலைமை தாங்கினார். செயல் தலைவர் கே.விஸ்வநாதன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தை கோட்ட செயலாளர்கள் பி.ரமேஷ், பி.ரவி ஆகியோர் தொடங்கி வைத்து பேசினார்கள்.

அஞ்சல்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்தும், டாக்மித்ரா, என்.டி.சி., சி.எஸ்.சி., திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், ஆர்.எம்.எஸ். அஞ்சல் பகுதிகளில் வெளியாட்களை நியமிப்பதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் செஞ்சிமணி, பன்னீர்செல்வம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். .


Related Tags :
Next Story