தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம்
x

ராணிப்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை முத்துக்கடையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டமும், ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டமும் நடைபெற்றது. உயர் மின் அழுத்த கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் நிலம், பயிர்களுக்கு அரசாணையின்படி, 10 மடங்கு இழப்பீடு வழங்கக்கோரியும், மாத வாடகை, கிணறு, ஆழ்துளை கிணறு, கட்டிடங்களுக்கு வருவாய் கிராமத்தில் அதிகபட்ச மதிப்பீட்டை கணக்கில் கொண்டு, உரிய இழப்பீடு வழங்க கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் ராணிப்பேட்டை முத்துக்கடையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கிட்டு தலைமை தாங்கினார். மாநிலக்குழு பெருமாள், மாவட்ட செயலாளர் எல்.சி. மணி, மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் அனைவரும் மனு கொடுப்பதற்காக ஊர்வலமாக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு கூட்டமாக மனு கொடுக்க அனுமதி இல்லை, பிரதிநிதிகள் மட்டும் கலெக்டரிடம் மனு கொடுங்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விவசாயிகள் கோரிக்கை ஏற்கப்பட்டு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் அனைவரிடமும் மனுக்களை பெற்றார்.


Related Tags :
Next Story