தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Aug 2023 6:45 PM GMT (Updated: 23 Aug 2023 6:46 PM GMT)

தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட தமிழர் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், நீண்ட நாள் சிறையில் வாடும் தமிழக முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்றது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தீரன் திருமுருகன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் பிரபு, தெற்கு மாவட்ட தலைவர் ரஞ்சித், கிழக்கு மாவட்ட செயலாளர் சுல்தான், நகர செயலாளர் பூபாலன், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் தமிழரசன் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். இதில். கட்சியின் தலைமை அரசியல் ஆலோசகர் செந்தமிழ் குமரன், முகவை மாவட்டம் முன்னேற்ற கூட்டமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளர் அஜ்மல் சரிபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story