எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்


எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Sept 2023 12:15 AM IST (Updated: 12 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடக்கோரி திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்

எண்ணும் எழுத்தும் திட்டத்தினை கைவிட வேண்டும். எம்மிஸ் பதிவு பணியில் இருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுப்பு செய்திட வேண்டும். விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த கூடாது. எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மூன்றாம் தரப்பு மதிப்பீடு மற்றும் ஆய்வினை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர் சண்முகவடிவேலு தலைமை தாங்கினார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில தலைவர் ரவி கலந்து கொண்டு பேசினார். இதில் கூட்டு நடவடிக்கை குழு மாவட்ட நிர்வாகிகள் பாலமுருகன், பாலசுப்பிரமணியன், ராஜா, முரளி, மதிவாணன், வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story