செவிலியரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்


செவிலியரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Sep 2022 6:45 PM GMT (Updated: 26 Sep 2022 6:45 PM GMT)

நெலாக்கோட்டையில் செவிலியரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் அருகே குந்தலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜெகதீஸ்வரி செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் பாக்கனா பகுதியை சேர்ந்த சகீரா பானு (வயது 23), அவரது கணவர் ஜுனைத், சிகிச்சைக்கு வந்து நீண்ட நேரமாக காத்திருக்கிறோம். ஏன் தாமதமாக வருகிறீர்கள் என்று ஜெகதீஸ்வரியிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதில், ஜுனைத், ஜெகதீஸ்வரியை தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஜெகதீஸ்வரி ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதேபோல் செவிலியர் தன்னை தாக்கியதாக சகீரா பானுவும் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நெலாக்கோட்டை போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் செவிலியரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி தமிழ்நாடு சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில், நெலாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு துணை தலைவர் பிரபாவதி தலைமை தாங்கினார். மாநில தலைவர் பரமேஸ்வரி,மாநில செயலாளர் மகேஸ்வரி மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டனர்.



Next Story