ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகப்பட்டினம்
நாகையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் புதியவன் தலைமை தாங்கினார்.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், மாவட்ட தலைவர் சரபோஜி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை விதிக்கும் மசோதாவை கவர்னர் அனுமதி வழங்காமல் புறக்கணிப்பதாகவும், ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை விதிக்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story