மரநாய் பொறி வைக்க விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
மரநாய் பொறி வைக்க விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
ஊரக வேளாண் அனுபவ பயிற்சிக்காக ஆழியாறு அருகே தங்கியிருக்கும் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிலும் 4-ம் ஆண்டு இளங்கலை வேளாண்மை மாணவிகள்(ஆழியாறு குழு), விவசாயிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அதன்படி தென்சித்தூர் கிராமத்தில் உள்ள தென்னை விவசாயிகளுக்கு மரநாய் பொறி வைப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். அதாவது தென் சித்தூர் கிராமத்தில் உள்ள தென்னை விவசாயிகள் மரநாயினால் சாகுபடி பாதிக்கிறது என்று வருத்தம் தெரிவித்தனர். இதனால் வேளாண் மாணவிகள் மரநாய்க்கு பொறி வைப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். அதில் விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.
Related Tags :
Next Story