காளான் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
ஆனைமலை அருகே காளான் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
கோயம்புத்தூர்
ஆனைமலை,
ஆனைமலை அருகே உள்ள சின்னப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர்கள், விவசாயிகளை சந்தித்து காளான் வளர்ப்பு குறித்து சிறப்பு முகாம் நடநத்தினர். இதில் சிப்பி காளான் வளர்ப்பு குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தாவர நோயியல் துறை உதவி பேராசிரியர் எஸ்.மருதாசலம் காளான் வளர்ப்பு குறித்து விளக்கினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர். விவசாயிகளுக்கு காளான் விதைகள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story