விதை நேர்த்தி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்


விதை நேர்த்தி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:45 PM GMT)

வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பில் விதை நேர்த்தி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கோமங்கலம்புதூரில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வசுமதி கலந்துகொண்டு திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். மேலும் வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் கருவிகள் குறித்தும், அதன் பயன்பாடு பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் புதுக்கோட்டை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதி ஆண்டு மாணவிகள் சூர்யா, சுபா ஆகியோர் தென்னையில் வரும் கேரள வேர் வாடல் நோயை கட்டுப்படுத்தும் முறை குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.

இதேபோன்று சிஞ்சுவாடியில் நடந்த கூட்டத்தில் புதுக்கோட்டை வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிலைய 4-ம் ஆண்டு மாணவிகள் விதை நேர்த்தி மற்றும் குழி நாற்றங்கால் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். மேலும் மாணவிகள் சார்பில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் விதைகள், நுண்ணூட்ட கலவை, டிரெய்கோ டெர்மா விரிடி மற்றும் பல வேளாண் அங்கக இடுப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. கண்காட்சியை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.


Next Story