'டிரோன்' மூலம் நானோ யூரியா தெளிக்க விவசாயிகளுக்கு செயல்விளக்கம்


டிரோன் மூலம் நானோ யூரியா தெளிக்க விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
x
தினத்தந்தி 13 Jun 2023 1:00 AM IST (Updated: 13 Jun 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

‘டிரோன்’ மூலம் நானோ யூரியா தெளிக்க விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமனை ஒன்றியம் வேட்டைக்காரன்புதூரில் தென்னை மரங்களுக்கு டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. மேலும் தென்னந்தோப்புக்கு அழைத்து சென்று விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:- நானோ யூரியா இலை வழியே ஊடுருவி இலை முதல் வேர் வரை சென்று தழைச்சத்தினை அளிக்கிறது. நானோ யூரியா உரத்தின் பயன்பாட்டுத்திறன் குருணை வடிவ யூரியாவை விட அதிகமாக உள்ளது. மண், நீர் மற்றும் காற்று மாசு அடையாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து, 8 சதவீத மகசூலை தென்னையில் அதிகரிக்கிறது. அரை லிட்டர் நானோ யூரியா திரவம் ஒரு மூட்டை யூரியாவுக்கு இணையான பலனை அளிக்கிறது. ஒரு ஏக்கர் நெல் வயலுக்கு அரை லிட்டர் நானோ யூரியா மற்றும் 20 மில்லி லிட்டர் ஒட்டுப்பசை தேவைப்படுகிறது. நெல், தென்னை, பந்தல் விவசாயம் உள்பட அனைத்து வகையான பயிர்களுக்கும் யூரியா மேலுரத்திற்கு பதிலாக நானோ யூரியாவை பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதையொட்டி ஆனைமலையில் டிரோன் மூலம் 100 ஏக்கர் விளைநிலங்களில் நானோ யூரியா தெளிக்கப்பட்டது. முகாமில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.


Next Story