வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x

ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ரஹ்மத்துல்லா தலைமை தாங்கினார். வட்ட தலைவர் எம்.நாசினி, வட்ட செயலாளர் ஆர்.சாந்தி, வட்ட பொருளாளர் பரிதா, வட்டார துணைத்தலைவர் ஜோதிலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டார துணை செயலாளர் ஷாயின்தாஜ் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் முத்தையன், மோகன்குமார், மாவட்ட செயலாளர்கள் தங்கராஜ், ரவிச்சந்திரன், வெங்கடேசன், குப்புரங்கன், ஆரிப் ஆகியோர் கலந்து கொண்டு ஆரணி நகரிலும், பையூர் கிராமத்திலும் உள்ள மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு அனைவருக்கும் வீட்டுமனை வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story