கோவில் இடத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
வேதாரண்யத்தில் கோவில் இடத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நாகை திருவாரூர் மாவட்ட குடிக்காணி மற்றும் குத்தகை சாகுபடிதாரர்கள் விவசாய பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், வர்த்தக சங்க மாநில துணைத்தலைவர் தென்னரசு, அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் கிரிதரன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் காசி அருள் உள்பட பல ஏராளமான விவசாயிகள், கோவில் நிலத்தில் குடியிருப்போர் கலந்துகொண்டனர். கோவில் நிலத்தில் குடியிருந்துவருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். கோவில் இடங்களை பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.கோவில் இடத்தில் குடியிருப்பவர்களை வாடகைதாரராக மாற்ற கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பட்டன. பின்னர் அவர்கள், கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலினிடம் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர்.